மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சர். நிமல்...

பல்கலைகளில் சகல நியமனங்களையும் இடைநிறுத்த உத்தரவு!!!

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி...
Ad Widget

அரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி!!

அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று பிற்பகல் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் DMC / Policy/ Requeriments...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறல்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது....

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ!!

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக,...

கார்த்திகைப்பூச்சூடிக் கோலாகலமாக ஆரம்பமான மரநடுகைமாத மலர்க்கண்காட்சி

வடக்கு மாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (20.11.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சி கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின்...

வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன்?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர். லலித் கமகே – மத்திய மாகாண ஆளுநராகவும் ராஜ கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநராகவும் வில்லி...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆலோசனை!!

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில்...

கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!!

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவரை பின்னால் பயணித்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையாகநேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று...

யாழில் இளம் யுவதி துஸ்பிரயோகம்!! இருவர் கைது!!

யாழ்ல் 16 வயது இளம் யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ் நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம்...

கொழும்பில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் இன்று (புதன்கிழமை) காலை காற்றில் 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக அந்த நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையான...

சற்றுமுன்னர் பதவி விலகினார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார். இந்த முடிவினை அவர் நேற்றே எடுத்திருந்த நிலையில், இன்று இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பிரதமர்...

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகரிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியிருந்தது....

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகல்!!

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று நிலையில் ஆளுநர்கள் தமது பதவி விலகலை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதி புதிதாக பதவியேற்றுள்ள நிலையில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் புதிய ஆளுநர்களை...

ஜனாதிபதியான மறுநாளே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள கோட்டா!

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார். குறிப்பாக தான் பயணம் செய்யும்போது வீதிகளை மூட வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பிற்கு இரு வாகனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இவ்வளவு காலமாக...

பாணின் விலை அதிகரிப்பு

பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. அதற்கமைய 450 கிராம் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு கண்டியிலிருந்தே கடிதம் வந்துள்ளது!!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கையைப் பொலிஸார் தாக்கல் செய்தனர். “சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. கண்டியிலிருந்தே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். அதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்...

உடுவிலில் டெங்கு நோய்த் தொற்றால் பாடசாலை மாணவி சாவு!!

டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (வயது -9) என்ற பாடசாலை மாணவியே...

சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்!!

துருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று...

ஜனாதிபதி தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் – இரா.சம்பந்தன்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts