- Tuesday
- September 1st, 2026
இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். அத்தோடு ஜனாதிபதி...
கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பங்கேற்பதில்லையென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை அமைச்சு பதவியேற்கும்படி, ராஜபக்சக்கள் தரப்பிலிருந்த தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர் பதவியை ஏற்பதில்லையென முடிவெடுத்துள்ளார்....
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33 வேட்பாளர்களும் அந்த சலுகையினை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக தேசிய மக்கள்...
கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த...
அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதியேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார். இதன்போதே அவர் அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ...
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன...
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக நந்தசேன கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார். இங்கு அவர் உரையாற்றுகையில்...
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என நாமல் ராஜபக்ஷ கூறினார். கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு...
எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று...
முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர்...
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று...
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் முகமாக தேர்தலை நாளை நடத்துவதற்காக இன்று (15) நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு இணைவாக இன்று காலை முதல் மதியம் வரை நாடளாவிய ரீதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும். எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும்...
இன்று (13.11.2019) புதன்கிழமை நடந்த சம்பவம் என்னை ஆத்திரம் கொள்ள வைத்தது. இன்று நேற்றல்ல பலநாட்களாக பிரயாணத்தின்போது நடக்கின்ற நிகழ்வுகள்! ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் - மற்றவர்களுக்காக பரிவு காட்டும் ஒரு சமூகம் என்று பலராலும் கொண்டாடிய சமூகம் இன்று ஏனோ சுயநலமுடையதாக மாறிவிட்டது. பகிர்ந்து விட்டுக்கொடுத்து பெரியவர்களை கனம் பண்ணிய எமக்கு இதைப்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த தம்பிராசா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டார். “ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால்மூல...
வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரிய கூட்டங்கள் அல்லது...
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி கம்பாஹா – பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம் களுத்துறை வடக்கு – முசாயஸ் கல்லூரி கண்டி – மொடல் பாடசாலை மாத்தறை...
Loading posts...
All posts loaded
No more posts
