Ad Widget

எனது படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் ! அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய

அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதியேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.

இதன்போதே அவர் அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த இலச்சினை ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ இலச்சினையின் நான்கு மூலைகளும் பௌத்தம் மற்றும் தேசத்தின் செல்வாக்கைக் குறிக்கின்றன. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உத்தனா சம்பதா , ஆரக்கா சம்பதா , கல்யாண சம்பதா மற்றும் சாம ஜீவிதா ஆகிய நான்கு பௌத்த சிந்தனைகளை சித்தரிக்கிறது.

நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு குறியீடுகள் சர்வதேச உறவுகளையும் விருந்தோம்பலையும் குறிக்கின்றன. ஒரேஞ் நிறம் தமிழ் மக்களையும் பச்சை நிறம் முஸ்லிம் சமூகத்தையும் குறிக்கிறது.

நான்கு அடி அகலமுள்ள வெள்ளை கோடுகள் அனைத்து திசைகளின் பாதுகாப்பையும் குறிக்கிறது.

சமமாக உள்ள மஞ்சள் துண்டு ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தின் ஒற்றுமையையும் குறிக்கிறது. மஞ்சள் என்பது வாழ்க்கையின் உயிர்ச்சக்தியைக் குறிக்கிறது.

Related Posts