- Friday
- May 8th, 2026
யாழ். நல்லூர் பகுதியில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. குறித்த பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழை். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து...
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அகழ்வுப் பணிகளைக் கைவிட்ட பொலிஸார்நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து சென்றனர்....
நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு...
எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்ரமசிங்க,...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள் – பொ.ஐங்கரநேசன்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்யத் தவறிவிட்டனர். அஜித் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாடுவதைப் போல, ரசிக மனோ நிலையில் சஜித்தைக் கொண்டாட வைத்துள்ளனர். விஜயகலா அம்மையார் இனிமேல் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்தான் தேசியத் தலைவர் என்றார். அவரை அடியொற்றி சஜித் பிரேமதாசா அவர்களை எமது தமிழ்த் தலைமைகள்...
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், தாஜூதீன்் படுகொலை உள்ளிட்ட பெரும் குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடற்படை, இராணுவ அதிகாரிகள் மீதான முக்கிய குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்திவந்த மூத்த பொலிஸ் அத்தியட்சர்...
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் வீடியோ எடுத்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை...
முக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13...
உறுப்பினர்களுக்கு தொலைபேசி படி வழங்க வேண்டும் என சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் தீர்மானம் ஒன்று முன் மொழியப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படியில் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. (உறுப்பினரின் சம்பளம் 20, 000 ரூபாய் அத்துடன் தொலைபேசி படி 6,000 ரூபாய். என 26,000 தற்போது வழங்கப்படுகின்றது)...
யாழ் மாநகரசபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவேளையில் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் முழு வடிவம்.. கௌரவ முதல்வர் அவர்களே, ஆணையாளர், செயலாளர், கௌவர உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். கௌரவ முதல்வரின் அனுமதியுடன் நீங்கள் சமர்ப்பித்த பாதீட்டின் பிரகாரம் எனது வரவு செலவுத்திட்ட உரையினை நிகழ்த்துகின்றேன். யாழ்.மாநகர...
நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து உறுப்பினர்கள் வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய...
சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இவ்வாறான மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாக தெரிவித்து, பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு கடன்வழங்குவதாக கூறி மக்களை சமுக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம், மக்கள் தங்களது...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார். அமைச்சர்களின் விபரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதரம், அரச...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சர். நிமல்...
இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி...
அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று பிற்பகல் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் DMC / Policy/ Requeriments...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
Loading posts...
All posts loaded
No more posts
