விக்கி அணிக்கு மகிந்த தரப்பு அழைப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைலையிலான கூட்டணியை, தம்முடன் வந்து இணைந்து செயலாற்றுமாறு மகிந்த ராஜபக்ச தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த ஞாயிறன்று புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,...

பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக யாழ் பல்கலைக்கு முன்பாக பெண்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு...
Ad Widget

வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய குழு – ஜனாதிபதி

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக வெலிக்கடையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிப்பதாக தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று (10) மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர்...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் – விண்ணப்பகாலம் நீடிப்பு

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம்...

கொரோனா வைரஸ் – சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 170 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக...

யாழ்.பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : 8 மாணவர்களுக்கு இடைக்காலத் தடை

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் எட்டுப் பேருக்கு சந்தேகத்தின் மாணவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று பத்தாம் திகதி முதல் விதித்துள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களால் மாணவியர்களிற்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மாணவர்களுக்கு...

இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த

இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் புரிந்துணர் உடன்படிக்யைின் முழு வடிவம்

வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் இணைந்துள்ள – தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக்கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

வளா்ப்பு நாயினால் ஏற்ப்பட்ட தா்க்கம் வாள்வெட்டில் முடிந்தது!!! 3 போ் படுகாயம்! 3 போ் கைது!!

யாழ்.இளவாலை- சாந்தை பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 போ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள நபா் ஒருவா் நாய் ஒன்றை வளா்த்துவந்துள்ளாா். குறித்த நாய் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் நாயை...

யாழ்.பல்கலை. பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் தெரிவு – ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்கு அண்மையில் இடம்பெற்ற வெளிவாரி உறுப்பினர்களின் தெரிவில் அடிப்படை நியமங்களையே பின்பற்றப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்பட்ட சிலர் இடம்பெற்றுள்ளமையும் அவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்...

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்....

மற்றொரு மாணவனுக்கும் பல்கலைக்குள் உள்நுழைய இடைக்காலத் தடை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு மூத்த மாணவனுக்கும் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது...

புதையல் தோண்ட முற்பட்ட படை அதிகாரி உள்ளிட்ட 21 பேரும் விளக்கமறியலில்!!

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இராணுவத்தினர் உள்பட 21 பேரையும் வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் முயற்சி சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது....

படிகிவதை காரணமாக இடைவிலகிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர நடவடிக்கை!!

படிகிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணக்கியல் பரீட்சைகளில் கணிப்பு பொறிகளுக்கு அனுமதி!!

கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக க.பொ.த.உயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது. அரச சேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும்...

சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள் பாவனை: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளினைக் கட்டுப்படுத்தக் கோரிய மகஜர் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில்...

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது அரசாங்கம்!

தொழில் கோரும் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் வயதெல்லையில் சிறு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. அதன்படி, 35 ஆக இருந்த விண்ணப்பதாரிகளின்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்து சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு!!

தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக வழங்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று...

தனது முதல் பயணத்தை ஆரம்பித்த தொழில் ஆலோசனை பேருந்து!

அமெரிக்காவின் நிதியுதவியுடனான “தொழில் ஆலோசனை பேருந்து” (Career Bus) இன்று தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கை முழுவதும் பயணிப்பதன் மூலம், தொழில் வழிகாட்டல் நிபுணர்களை அணுகுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட கிராமிய இளைஞர்களுக்கு அது தொழில்முறை வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளை எடுத்துவரும். தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினரின் பங்கான்மையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட...

யாழில் ஒரே ஆண்டில் 612 பேர் தற்கொலை முயற்சி!- அதிர்ச்சி அறிக்கை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர்களில் 105 பேர் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தரவுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளைவிட மிகவும் உயர்வடைந்து காணப்படுவதாகவும் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்றுக் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts