Ad Widget

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்து சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு!!

தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக வழங்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியில் நாம் கடந்த காலம் தொடக்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தோம்.

அந்த முயற்சி இன்று வெற்றியளித்துள்ளது. நான்கு கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசியக் கட்சி, தமிழ் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உதயம் ஆகிய தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் அவருடைய பிறந்த தினத்திற்கான பரிசாக எமது கூட்டணி உருவாக்கத்தை வழங்குகிறோம்.

இந்தப் பரிசினை பெற்ற பின்னராவது சுமந்திரன் தமிழ் மக்களுக்காக பயணிப்பார் என எதிர்பார்க்கின்றோம். மேலும் எமது கூட்டணியில் தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts