சி.சி.ரி.வி. கமராவை பொருத்திய அரச அலுவலருக்கு அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது யாழ்ப்பாணம் மாநகர சபை ஊடாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன், அந்தப் பகுதியில் வசிக்கும் அரச அலுவலகர், மாநகர சபை உறுப்பினர்கள் முன்னிலையில் அண்மையில்...

யாழில் குழு மோதல் காரணமாக ஒருவர் மீது வாள் வெட்டு!!

கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர். அஜித் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளார். வெட்டுக்...
Ad Widget

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு!

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது. நிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது. வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான...

இன்று இரவு முதல் கன மழை பெய்ய வாய்ப்பு – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்த குறைந்தமட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (புதன்கிழமை) இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என அத்திணைக்களம்...

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு!

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின்...

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா!!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா. தனது கனடா நாட்டு...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் – கஜேந்திரகுமார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத்...

யாழில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று...

தையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

யாழில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!! இராணுவம் களத்தில்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியின் வழிகாட்டல் இந்தப் பணி இடம்பெறுவதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த நடவடிக்கை யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் இன்று ஆரம்பித்து...

கைத்தொலைபேசி வைத்திருப்போருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன. அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கியுள்ள ஆனால் தற்போது பாவிக்காத பழைய சிம் அட்டைகள் இருந்தால் அவற்றை டிஅக்டிவேட் செய்து கொள்ளுங்கள்....

ஜனவரி 3ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படிநேற்று (2) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

தமிழினத்தின் அபிலாசைகளுக்காக உதயமாகிறது புதிய கட்சி- சிறிகாந்தா

தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறிகாந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.தே.க.வின்...

யாழின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அழைப்பு!

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை பொலிஸாருடன் இணைந்து செயற்பட வருமாறு புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மகேஷ் சேனாரத்ன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார். இவர், பொலிஸ் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்பம்...

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி அலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது!!!

சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி...

காரைநகரில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு – இளைஞர்கள் திரண்டு சிரமதானம்

காரைநகரில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள நிலையில் பிரதேசத்தில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு சிரமதானப் பணியை நேற்று முன்னெடுத்தனர். காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாள்களில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக 58 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். காரைநகரில் கடந்த ஆண்டுகளைவிட டெங்கு நோய்த் தாக்கம் இம்முறை அதிகரித்துக்...

தடிகள் மற்றும் வயர்களுடன் வீதிச் சோதனையில் பொலிஸார் – பொற்பதிச் சந்தியில் பதற்றம்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிச் சந்தியில் சுற்றுக்காவல் பொலிஸார் விக்கெட் தடிகள் மற்றும் வயர்களுடன் நின்று வீதிச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த வீதிச் சோதனை நடவடிக்கை நேற்று (டிசெ.1) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி தொடக்கம் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதிச் சந்தியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுதாராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 தனியார் பரீட்சாத்திகளாவர். பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன....

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. நாட்டின்...
Loading posts...

All posts loaded

No more posts