Ad Widget

யாழில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது யாழ். நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலைமைகள் தொடர்பாக பேசப்பட்டது.

பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்தை நிறுத்துமாறு தமக்கு அது பல நஷ்டங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்போது வர்த்தகர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்தபோதே எம்.ஏ.சுமந்திரன் அந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றினை மாநகர சபையில் முதல்வரே கொண்டுவர உள்ளதாகவும் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts