- Tuesday
- September 1st, 2026
தனித்து வாழ்ந்த வயோதிப் பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த கொள்ளையர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்றது....
யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்...
பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும் என்றாலும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வரமுடியாது...
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத...
2013 இல் இரணைமடுவில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்த போது அதை தடுத்து நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிறிதரனே என்று ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மண்டைதீவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவை நீர்...
முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன், முக கவசம் அணிவது தொடர்பில் கடும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும் அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணப்...
“இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம். இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது” என்று உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். நாடாளுமன்ற...
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். வைரஸ் பரவலோடு உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்ற வகையில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்தபோது வெவ்வேறு சவால்கள் எழுந்தபோதும் சிறந்த திட்டங்களுடன் அவை ஒவ்வொன்றையும் வெற்றி கொள்ள முடிந்தது...
நாட்டில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துதல் மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. ஒருநாளில் குறைந்தது 10 பேர் வரையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2665 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 19 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களில் மூன்றுபேர் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 02 பேர் இராஜாங்கனை, லங்காபுர பிரதேசத்தை...
கம்பஹா – ராகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்ட பிற ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னரேயே அவர் பொலநறுவையில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் உட்பட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதால் அவருக்கு பிசிஆர்...
யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களின் மேலங்கிகளை (சேர்ட் , ரி.சேர்ட்) கழட்டிய பின்னரே அவர்களை தடுப்பு காவலில் பொலிஸார் தடுத்து வைப்பதாக குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை தடுத்து வைக்க முதல் அவர்களின் மேலாடைகளை பொலிஸார் கழட்டிய பின்னரே...
“வடமாகாணத்தில் கோரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கோரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன”இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி அறிக்கையில்...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்....
யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும்...
தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ராஜபக்ஷவினரின் நோக்கம்...
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களே இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts
