Ad Widget

குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார் சிறிதரன்- அங்கஜன்

2013 இல் இரணைமடுவில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்த போது அதை தடுத்து நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிறிதரனே என்று ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மண்டைதீவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவை நீர் ஆகும். இவ்வாறனதொரு நிலையில் இரணைமடு நீர் வடமாகாண மக்கள் அனைவருக்கும் சொந்தம் ஆகும். அதை பிரதேச வாரியாக பார்த்தால் மக்களிடையே ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காரியத்தை செய்த சிறிதரன் அவர்கள் இப்போது தீவக பகுதிகளில் மக்களிடம் வந்து தேர்தல் காலத்தில் வாக்கு கேட்பது என்பது குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது.

இப்போது புதிதாக பதிவியேற்ற அரசாங்கம் விரைவில் இரணைமடு நீரினை இங்கே கொண்டு வருவதற்கான வழிவகை செய்யும் மற்றும் யாழ் மாவட்டத்தில் பாரிய அளவிலான நீர்சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுவப்பட்டு யாழ் மாவட்டம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

எமது அரசாங்கம் கூறியது போன்று அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வரும்! கொண்டு வந்து சேர்ப்பேன். அங்கஜன் இராமநாதன் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார். அவர் வென்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வென்றதிற்கு சமன் என தமிழரசுகட்சியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து முற்றாக மறுக்கவேண்டிய விடயமாகும் நான் ஒரு விடயத்தை ஆணித்தனமாக கூறிகொள்கிறேன். அங்கஜன் இராமநாதன் வென்றால் மக்கள் வென்றதிற்கு சமன், அங்கஜன் இராமநாதன் வென்றால் தர்மம் வென்றதிற்கு சமன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை வென்றால் தமிழ் மக்கள் தோற்றதிற்கு சமன், தமிழ் மக்கள் ஏமாறியதற்கு சமன், இருபத்து ஐந்து வருடங்கள் ஏமாற்றியது போதாதென்று இன்னமும் ஏமாற்றும் தந்திரத்தை ஆரம்பித்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு என மண்டைதீவு பிரதேச மக்களை சந்தித்த போது தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் சக வேட்பாளர்களும் மண்டைதீவு சென் பீட்டர்ஸ் தேவாலய வழிபாடுகளில் ஈடுபட்ட பின் மண்டைதீவு மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

Related Posts