Ad Widget

இன்று காலை முதல் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம்!! பொலிஸாரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு!!

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.

முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன், முக கவசம் அணிவது தொடர்பில் கடும் எச்சரிக்கைகளையும் விடுத்த வருகின்றனர்.

இலங்கை அரசின் கொரோனா தடுப்பு சட்டத்த்தினை கடைப்பிடிக்கும் வகையில் மக்கள் நடமாட்டங்களை மேற்கொள்ளும் வகையில் கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவரும் குறித்த நடவடிக்கையினை பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகின்றனர்.

கடந்த மாதத்திற்கு முன்னர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சமூக தொற்ற ஏற்படாத சூழலில் மக்கள் கொரோனா தடுப்பு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்காத வகையில் நடமாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாட்டை அச்சுறுத்தும் நிலை காணப்படும் சூழலிலும் மக்கள் முக கவசம் அணிவது தொடர்பில் அக்கறை செலுத்ததாது செயற்பட்டு வந்தனர். இந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன், முக கவசம் அணிவது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளால் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணியப்பட வேண்டும் என்பதுடன், அதனை முறையாக அணிய வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாத அனைவரினதும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பார்வையிட்டதன் பின்னர் பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நடைமுறை பின்னபற்றாத நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தள்ளனர். வீட்டை விட்டு வெளியே நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதுடன், முக்கியமாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பொலிசாரினால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கி்றனர்.

சமூக தொற்ற ஏற்படாதவாறு வடக்கில் உள்ள மக்கள் சுகாதார முறையினை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தொற்றுள்ள ஒருவர் பிரதேசத்தில் நடமாடும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளமு் வகையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில் கிளிநாச்சி பொலிசாரின் குறித்த செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts