- Tuesday
- May 5th, 2026
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. இரண்டு வீடுகளுக்குள்...
வீடு மற்றும் கடைகளின் உரிமையார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டோரிடம் வாடகைக் கட்டணத்தை அரைவாசியை வசூலிக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும் புற நகர்களில் தங்கியிருந்து உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களிடம் வாடகைக் கட்டணத்தின் அரைவாசியை வசூலிக்குமாறு அரசு கேட்டுள்ளது. வீடுகள் மற்றும்...
சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணித்துள்ளார். இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் கம்லத் தெரிவித்ததாவது; அழகு நிலையங்கள் மற்றும்...
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததால் அந்தக்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ...
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்துள்ளது. இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில்...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06-05-2020) தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையின் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்....
306 சிறைக்கைதிகள் நாளை விடுதலை : தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை என்கிறது அரசாங்கம்
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில்...
வடக்கு மாகாணத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நீண்டநாள்களளாக ஊரடங்கு மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு இருந்து தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்....
நாடுமுழுவதும் இன்று இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று கோவிட் -19 நோய் பரவரைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று...
யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்குத்...
பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ஆய்வுகூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன எனவும் அவர்...
உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...
தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பேலி தனிமைப்டுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்கா மாவத்தையினைச் சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற 78 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி...
கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து...
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள 755 பேரில் 550 பேர் தொடர்ந்தும்...
சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சர் அனுமதியளித்துள்ளார். சுகாதார துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர்...
ஜூன் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. “ஜூன் 1 முதலாம் திகதி தொடக்கம் பல கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மே 11ஆம் திகதி முதல் பணிக்கு அறிக்கையிடவேண்டும். க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண நிலை மாணவர்களுக்காக பாடசாலைகள்...
கோவிட் -19 நோயால் இன்று உயிரிழந்த பெண், சுமார் ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்துள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மோதரை வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் கோரோனா...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படிரக வாகனம் ஒன்றை எடுத்துத் தப்பிச் சென்றதுடன், அந்த வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் கைவிட்டு தப்பித்துள்ளார். எனினும் சந்தேக நபர் யாழ்ப்பாணம்...
Loading posts...
All posts loaded
No more posts
