- Tuesday
- May 5th, 2026
கொவிட் -19 தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியா உள்ளோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தொடர்ந்தும் மக்கள் தமது சுய பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமூக பரவல் குறித்த அச்சம் குறைந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் பரிசோதனைகளை...
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி...
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது....
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல், பொல்பித்திகமவைச் சேர்ந்த 72 வயதான பெண், ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த, கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. COVID -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.PMO Tamil news...
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை...
பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. அதுதொடர்பில் சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின்...
தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40)...
மோட்டார் சைக்கிளின் ஆவணங்களின் மதுபோதையில் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற போது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்...
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை” இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மக்களின் தேவையற்ற ஒன்றுகூடலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் போது மட்டுமே...
தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்கள் உள்ள குடும்பங்கள், ஆடைத் துறை உள்ளிட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு இடர்கால உதவித் தொகையான 5 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர்...
மிருசுவில் கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்....
இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இன்று முற்றுப்பெற்றுள்ளன. கோறளைப்பற்று வடக்கு, வாகரை...
உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம்...
கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது....
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்பவம்...
இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று – இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா - எல பகுதியில் பதிவாகியுள்ளது. 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனாவால் மீளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜா எல நகர சபையின் பிரதான...
இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடித்துள்ளது. கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக...
வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும்...
மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர்...
Loading posts...
All posts loaded
No more posts
