Ad Widget

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை – இரண்டாம் கட்டம்

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இன்று முற்றுப்பெற்றுள்ளன.

கோறளைப்பற்று வடக்கு, வாகரை உதவிப் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் ரீ. தவநேசன் மற்றும் கிராம சேவை அலுவலர் ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பில் உள்ள கிரிமிச்சை என்ற பின்தங்கிய கிராமத்திலுள்ள 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் 2020 மே 3 ஞாயிற்றுக்கிழமையன்று விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்காக பட்டிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ரூபா 2,000 பெறுமதி கொண்ட உலர் உணவுப் பொதிகளை எமது வேண்டுகோளின் பேரில் வழங்க முன்வந்ததுடன், அதற்காக ரூபா 300,000 தொகையை நாம் செலுத்தியிருந்தோம்.

இப்பொதியில் அடங்கியுள்ளவை:

அரிசி 10 கிலோ = 950.00
கோதுமை மா 10 கிலோ = 900.00
சோயா மீட் பக்கெட் 3 = 150.00
மொத்தம் = 2,000.00

மேற்குறிப்பிட்ட உலர் உணவுப் பொதியானது சாதாரண குடும்பமொன்றுக்கு 2 வாரங்களுக்கு உதவும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts