- Tuesday
- May 5th, 2026
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக் கடன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை அமைச்சரவை இணைப்...
வடமராட்சி கிழக்கு, முச்சந்தியில் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் கிளைமோர் தயாரித்து பொருத்திய சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக நேற்றையதினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில்...
உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் எரிபொருள் விலை குறையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...
வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....
எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலமைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச் சந்தைகளையும் திறப்பதற்கு...
நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும். அத்தோடு தினமும் அதிகாலை 4 மணிக்கு தளர்தப்படும் ஊரடங்குச்...
“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக...
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ஒன்றை எடுத்துசென்று சுற்றியல் ஒன்றினால் அதனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த பொருள் திடீர்...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 16 பேர் நேற்று (மே 27) புதன்கிழமை நள்ளிரவு (11.55 மணி) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் 150 பேர் கோரோனா தொற்றில் இனங்காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 137 பேருக்கு கோரோனா...
அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல்...
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கயில், யாழ் மாவட்டத்தில் வறுமை...
யாழ்ப்பாணத்தில் கோரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த வந்த மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்...
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில்...
நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்த முதியவரின் வீட்டுக்கு...
கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த அம்புலன்ஸ் வண்டி ஏ-9 வீதியால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் சென்றவேளை, கொடிகாமம் – புத்தூர் சந்தியில் முன்னால் சென்ற டிப்பர் திடீரென திரும்பியபோது அம்புலன்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளது. இந்நிலையில், அம்புலன்ஸ் வாகனத்தின்...
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “வன்னி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக கொவிட் 19 ஒழிப்பு செயலணி குழு ஜனாதிபதிக்கு...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார். ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்பட்டார். 1964ஆம் ஆண்டு...
நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சினிமா திரையரங்குகள் முழுமையாக குளிரூட்டப்பட்டவை என்பதால் அவை இயங்கும் முறைகள் குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
