திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு!!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சினிமா திரையரங்குகள் முழுமையாக குளிரூட்டப்பட்டவை என்பதால் அவை இயங்கும் முறைகள் குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்னமும் முடிவெடுக்கவில்லை எனவும் அவர்களது ஆலோசனைகளின் பின்னரே திரையரங்குகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது இடங்களில் மக்கள் நடந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

எனவே மக்கள் தமது செயற்பாடுகளில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுவதுடன், மீறுபவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

Related Posts