Ad Widget

நடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு அரச காணியுடன் சலுகை வட்டியில் வீட்டுக்கடன்!!

நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக் கடன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த தகவலை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

‘இந்தத் திட்டத்தில் வீட்டின் விலையில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்படாது. இந்த முயற்சி நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான அரசின் நோக்கமாகும்.

இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts