- Tuesday
- May 5th, 2026
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் பயனாளரிடம் கையளிக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணி ஒருவருக்கே குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிரூபிக்கப்பட்ட திறமைக்கு முன்னுரிமை வழங்கவும், நல்லாட்சியின் பொய் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் அனைத்து வாக்களர்களுக்கும் கிடைக்கும் அரியதொரு சந்தர்ப்பமாகும் என நம்புகிறேன். கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்தியமை மூலம் எமது நாடு பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடிப்பதுடன், சூழலைப் பாதுகாத்து, முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரமொன்றில் ஈடுபடுமாறு அனைத்து...
நாடுமுழுவதுமுள்ள திரையரங்குகளை ஜூன் 27ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 20ஆம் திகதி கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து திரையரங்குகள் அனைத்தும் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி திரையரங்குகளை வரும் ஜூன் 27ஆம் திகதி மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலாசார...
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு நேற்று மாநகர தீயணைப்புப் படைப் பிரிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன்...
வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகாமையில் வைத்து 10 இளைஞர்கள் யாழ்ப்பாணம்...
மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு சலுகை காலம் வழஙக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸாரினால் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்த...
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் என அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
ஆவா குழுவின் முக்கியஸ்தர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் , தற்போது பிரான்சில் வசித்து வரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி அக்காராயன் குளத்தை அண்டிய காட்டு பகுதி ஒன்றில் கடந்த 12ஆம் திகதி கூடிய சில இளைஞர்கள் “சன்னா”...
தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (17.06.2020) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை...
வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்போது இறுதி மாத மின் கட்டணப் பட்டியல் சரியானது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பாவனையாளர்கள் நுகரும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இறுதிமாத மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த...
யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு, நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றநிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தை, கடற்படையினர் சுற்றிவளைத்து...
இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்கல்லே ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, இலங்கையில் காலியில் உள்ள முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி திறந்துவைத்தார். கடற்படை உருவாக்கிய பல வடிவமைப்புகள்...
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதான் பின்னர் இன்றுவரை 15 தேர்தல்...
கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, கேகாலை மாவட்டதைச் சேர்ந்த ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி...
வல்லை. இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் போது வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரையே ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில்...
2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் வாக்களிக்க முடியும். குறித்த...
யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகிய வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்...
“தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள். இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள்” என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு...
Loading posts...
All posts loaded
No more posts
