- Saturday
- May 3rd, 2025

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வி யினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர்....

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையின்...

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல்...

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (21) தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை...

எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, அடையாளச் சான்று உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை...

அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல்...

பருத்தித்துறை - தும்பளை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி பெண் வீட்டில் இருந்த வேளையில், வீட்டை கொள்ளையிடும் நோக்கில் வந்த நபரொருவர் பெண்ணை பொல்லால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக...

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நேற்று(20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளிலும் 2025 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளன. கல்வி அமைச்சின் தகவலின்படி, 2025 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணையானது எதிர்வரும் மே 09 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். அதையடுத்து, 2025 ஆம்...

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார் நாடாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 18ஆம் திகதியும் பெரிய...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும்...

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்ட ரீதியாக பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை நேற்று...

2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) அன்று முடிவடையும். மேலும், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே...

நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக ”யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதும் , இம் மோதலுக்கான மூலக்காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நபர் ஒருவரை கடத்தியமை மற்றும் அவரை காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID)...

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன்.திடீரென அங்கு சிவில் உடையில் வந்த பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள்...

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பேஸ்புத் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், "டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால்...

All posts loaded
No more posts