வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஆன்லைன் வாகன வருமான அனுமதிப் பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஆஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.

ஜூலை 3 ஆம் திகதி தொடங்கிய இந்த இடையூறு, வாகன வருமான உரிமங்களை ஆன்லைனில் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை பாதிக்கிறது.

இந்த சிக்கலைத் தீர்த்து, சேவைகளை விரைவில் மீட்டெடுக்க தொழில்நுட்பக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக ICTA தெரிவித்துள்ளது.

Related Posts