இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நேற்று(14) நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளது. அமர்வின்...

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – க.இளங்குமரன்

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (14) பிற்பகல் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்த அவர் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார் அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும்...
Ad Widget

வெசாக் தினத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தமிழர்களிடருந்து ஒரு கோரிக்கை!!

வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வெசாக் போயா தினத்தன்று, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள...

கஜேந்திரகுமாரை நேரில் சந்திப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு!!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது....

எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை!!

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது...

விரைவில் மின் கட்டண திருத்தம்!!

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென...

வடக்கில் அநுர அலை ஓய்ந்து விட்டது!!

நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில்...

நில அபகரிப்பிற்கு எதிரான மே 29 ம் திகதி போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் – சுமந்திரன்

ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற...

3000 நாட்களை எட்டியது காணாமல்போன உறவுகளின் போராட்டம்!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம்...

ஜே.வி.பி யின் பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்!!

ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின்...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும்...

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்....

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி குறித்து சுமந்திரன் கருத்து!

வடக்கில் சுமார் ஐந்தாயிரத்து 941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதியிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த வர்தமானிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஆலோசனைகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள்...

உள்ளூராட்சி தேர்தல்; ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் அறிவிப்பு!

2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு விடுப்பாக வழங்கப்பட வேண்டும், மேலும் அது அவர்களின் தனிப்பட்ட விடுப்பைப் பாதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு 40 கிலோமீட்டர்...

யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15...

நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 இந்திய ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை...

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான விசேட அறிவித்தல்

உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts