தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (23) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts