தொடர்ந்தும் ஆபத்தில் யாழ்ப்பாணம்! மரணங்ளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதான மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். அத்தோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604...

யாழிற்கு நன்னீர் திட்டம் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. யாழ்.குடாநாட்டிற்கு நன்னீரை கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு...
Ad Widget

தடுப்பூசி ஏற்றிய சுன்னாகம் பாடசாலை அதிபர் திடீர் உடல்நலக் குறைவால் மரணம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப் பட்டிருந்த அவா் திடீரென உயிரிழந்துள்ளார். இதேவேளை, யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன....

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த. மங்களேஸ்வரன் நியமனம்

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும்...

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மீனகம் இணையத்தளத்தை நடத்துவது நீங்களா எனவும் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத...

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு...

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல்!!

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும். அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப்...

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை!!

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும்...

கொழும்பு, கண்டி, யாழ் மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை...

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள்? – மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விளக்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்த விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு...

குறிகாட்டுவான் கடற்கரையில் இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன

குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 18 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது.

மட்டுப்படுத்தபட்டோரின் பங்கேற்புடன் திருமண விழா; ஆலயங்களில் வழிபாடு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு

திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்கேற்புடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்க்கும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி...

எரிபொருள் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற...

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு...

தரம் 5 புலமைப்பரிசில், ஏஎல் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 29ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

யாழ்ப்பாணத்தில் மேலும் பல பிரதேசங்கள் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிப்பு – மீள்குடியமர வேண்டியவர்களின் விவரம் மீளாய்வு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விவரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு...

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676...
Loading posts...

All posts loaded

No more posts