வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை...

யாழில் தடுப்பூசி பெறுவதில் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆர்வமில்லை; ஆபத்துக் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை!!

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...
Ad Widget

இந்து ஆலய விக்கிரங்கள் திருட்டு தொடர்பில் இராணுவச் சிப்பாய் கைது

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள...

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைப்பதா? – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பட்டத்திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், விருந்தினர்களாக அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும். தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சியின் அங்கமாக, இப் பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் இந்நிகழ்வு வரலாற்றில் பதியப்படும் என தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது – அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது மாற்றமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே இதனை...

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு – விசேட அறிவிப்பு வெளியானது!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குருநகரில் கத்திக்குத்து – மூவர் வைத்தியசாலையில்!

குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டிக்டொக் வீடியோ தொடர்பாக ஏற்பட்ட தகராறு – கொழும்பில் 17 வயது சிறுவன் கொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து, குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ்...

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம்

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையெனவும் அந்த சங்கம்...

யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி முழுகடையடைப்பு போராட்டம்!!

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24...

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி மேலும் 24 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி உயிரிழந்தவர்களில் 20...

இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன்...

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை – பிரதமர் மஹிந்த

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவலொன்று பரவி வருகிறது. இந்நிலையிலேயே, ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர் என தெரிவித்துள்ளார். நாட்டின்...

பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா – அரசாங்கத்தின் அறிவிப்பு!

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற...

கொட்டும் மழையிலும் இந்திய மீனவர்களுக்கெதிராக போராட்டம்!!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு...

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் பௌர்ணமி போயா விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் தைப் பொங்கல், சுதந்திர தினம் மற்றும் தீபாவளி என்பன வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் வந்துள்ளன. சிங்களப்...

இலங்கையில் மேலும் 41 பேருக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவுக்கு மாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்....

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம்!

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts