Ad Widget

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது.

அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன.

ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் பௌர்ணமி போயா விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் தைப் பொங்கல், சுதந்திர தினம் மற்றும் தீபாவளி என்பன வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் வந்துள்ளன.

சிங்களப் புத்தாண்டு, போயா மற்றும் புனித வெள்ளி ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக வருவதால் ஏப்ரல் மாதத்தில் ஐந்து நாட்கள் நீண்ட வார இறுதி காணப்படுகிறது.

இதுதவிர, மே தினம், ஹஜ், கிறிஸ்மஸ் தினங்கள் மற்றும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாத போயா விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளன. தொடர்ந்து வரும் திங்கட்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கும் வழக்கமான நடைமுறையை மேற்கொண்டால் நீண்ட வார இறுதி நாட்கள் காணப்படும்.

Related Posts