- Sunday
- October 4th, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன....
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை கடந்த (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16...
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது...
பாடசாலைகளில் தரம் 1 மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் புதிய சுற்றறிக்கையை 2027 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கல்வியில் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய வடிவமைப்பு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,...
கிளிநொச்சி, ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு...
வடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு 25.06.2026 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைவாக, பின்வரும் பதவிகளுக்காகத் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்: சிவில் பொறியியலாளர் - 10 வெற்றிடங்கள்...
மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடான...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (22) 31 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 07 என்புக்கூடுகள் அடையாளம்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது , எதிர்வரும் ஜூலை...
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். நேற்று மாலை (22) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த...
அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!
வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான...
தான் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அடிப்படைத் தகுதி இல்லாத 58 பேரை சுகாதாரத் தொண்டர்களாக நியமித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார...
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (22) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும். அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, யாழ். குடாநாட்டின் பல்வேறு...
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார். [caption id="attachment_127007" align="aligncenter" width="612"] shot from a handgun with fire and smoke[/caption] இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ...
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன்,...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றும் (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றில்...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது இறுதித் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதால்,...
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் ஜூன் 19, 2026 அன்று நிகழ்ந்துள்ளது யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் (குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்), நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கும் அகில இலங்கை தமிழ்க்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட பெண் வைத்தியர் டாக்டர் கிருசாந்திக்கு எதிராக, எவ்வித ஆதாரமும் இன்றி அர்ச்சுனா பரப்பிய அவதூறு வீடியோக்கள் அனைத்தையும் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எவருக்கும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க பேச்சு சுதந்திரம் கிடையாது என...
Loading posts...
All posts loaded
No more posts
