Ad Widget

தமிழ்க்கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பெரும் சத்தியாக்கிரகம்; நகரசபை மைதானத்தில் நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வர்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெறவுள்ளது. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அழுத்தங்கள்...

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி மீது திருநெல்வேலியில் தாக்குதல்

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார் .
Ad Widget

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைய மறுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சியில் கிராமசேவையாளர் பலி

வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நெல்லியடி தீவிபத்தில் இரு கடைகள் முற்றாக சேதம்

யாழ் நெல்லியடி சந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீவிபத்தொன்றின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் துரத்த மோட்டார் சைக்கிள் ஒடியவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில்

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர். (more…)

யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றியச் செயலர் தாக்கப்பட்டதை பீடாதிபதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த தாக்கப்பட்ட சம்பவத்ததை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரும் அனைத்துப்பீடாதிபதிகளும் வன்மையாக கண்டித்துள்ளனர்.இத்தாக்குதலால் மாணவர்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக சுமூகமான செயற்பாட்டிற்கு உதவப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

‘சுகவாழ்வை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்றுமருத்துவக் கண்காட்சி 21.05.2012 பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக...

கைவிடப்பட்ட நிலையில் பிறந்து ஒருநாளேயான சிசு மீட்பு: யாழில் சம்பவம்

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது (more…)

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த த.தே.கூட்டமைப்பு நிலைப்பாட்டில் தளர்வு!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழு : யாழ். டி.ஐ.ஜி

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) கே.ஈ.எல். பெரேரா தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் கால வரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்ளோம் என மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதுஇது தொடர்பில் மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

கூட்டமைப்பின் பதிவு விண்ணப்பம் மீண்டும் நிராகரிப்பு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.கட்சிப் பதிவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் கட்சிப் பதிவினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி

'எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை...

முள்ளிவாய்க்கால் வலிகள் தந்த வாரம்: யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமாகஅனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று...

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். (more…)

யாழ்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் சிலாபத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் வடமராட்சி வியாபாரி மூலையைச் சேர்ந்த வைத்தியரான திருமதி பிரணவன் நீராயா வயது 27 என்ற பெண் வைத்தியரே மரணமானவராவார். (more…)

யாழில் இராணுவத்தினரின் யுத்தவெற்றி நிகழ்வு!மாணவர்கள் படையினருக்கு சின்னம் சூட்டினர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார்...
Loading posts...

All posts loaded

No more posts