Ad Widget

வடமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைக்கொடுப்பனவு வழங்கப்பட்டது

8747085306_0e0598cf85வடமாகாணத்தில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கான நிலுவைக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முற்திகதிக்கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றிகான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாது நிலுவையில் இருந்துள்ளது.

இது குறித்து ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து வடமாகாண ஆளுனரினால் இக்கொடுப்பனவிற்கென 130 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயத்திலும் இக்கொடுப்பனவு வழங்குவதற்கு 2017 பேர் தெரிவு செய்யப்பட்டு இந்த நிலுவைக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் செல்வராசா மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts