- Tuesday
- April 21st, 2026
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என...
அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின்...
அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு...
மருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை. அவ்வாறான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின்...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு நேற்று(01.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் லிட்ரோ...
மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது , கால் வழுக்கி விழுந்துள்ளார். அதன் போது...
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு விசேட வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் நேரடித் தலையீட்டில், வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். வடக்கு...
இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. னவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கல்கந்த கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விலைச்சூத்திரம் ஔடத கட்டுப்பாட்டு...
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில்...
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது....
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.
இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள்...
பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச்...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...
லங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் புதன்கிழமை (26) சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்த 7 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து)...
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான...
நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி,...
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (27) வியாழக்கிழமை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில்...
Loading posts...
All posts loaded
No more posts
