Ad Widget

வடக்கில் போதையை கட்டுப்படுத்த விசேட வழிகாட்டல் குழு அமைப்பு!

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு விசேட வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் நேரடித் தலையீட்டில், வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

வடக்கு மாகாண பிரதம செயலர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினர், சட்டமருத்துவ அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் என உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல் குழு தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

உயிர்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள், பாவனையாளர்கள் தொடர்பில் கிடைக்கும் இரகசியத் தகவல்களை அடிப்படையாக வைத்து கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் உயிர்கொல்லிப் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுகளை சரியான முறையில் இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு அரசின் முழுமையான ஒத்துழைப்பு இந்த விசேட குழுவுக்கு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts