- Wednesday
- July 23rd, 2025

மாநகரசபை துப்புரவு பணியாளர் ஒருவரை பொலிஸார் தாக்கியமையைக் கண்டித்து மாநகரசபை துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் நல்லூர் வைமன் வீதியில் ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் செவ்வேளின் அலுவலகத்தின் மீது வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு...

விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது. அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் அவர் கொழும்பு 14 சுகததாச...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார். (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பா தம்பிராசா யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளார். (more…)

சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையாரான இராமநாதன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பொலிஸார் அறிவித்துள்ளனர். சாவகச்சேரியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாவகச்சேரி வேட்பாளரான குமார் சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது அங்கஜயனின் தந்தையாரே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. அதன்படி...

”இந்திய பிரதமர் எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கூறினார் முதலில் இந்த தேர்தலை வெல்லுங்கள் அதன் பின் நாம் உங்களை பார்த்துக் கொள்கின்றோம், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என கூறினார்.” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வவுனியாவில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்களை கொண்டு காணாமல் போனோர் தொடர்பிலான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நவிப்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுயாதீனமானதாகவும் நடைபெறுவதற்கான சூழ்நிலையினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் (more…)

இலங்கையில் மனித உரிமை நிலைமையை பற்றிய முழு அறிக்கையை கொடுக்க தனக்கு காலம் எடுக்குமெனவும், இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் என்னிடம் பல கேள்விகள் உள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்தது. (more…)

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை த.தே.கூட்டமைப்பின் வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார். (more…)

நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற சில அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்' என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts