Ad Widget

நிலத்தடி நீரைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAயாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதனைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் யாழ். மாவட்ட நிலத்தடி நீர் குறித்து ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் தமக்கு வழங்கிய ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சியான விடயங்கள் இருப்பதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் யாழ். நகர், நல்லூர், தெல்லிப்பழை, பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட நிலத்தடி நீர்பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகள் கிடைத்துள்ளது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே எதிர்காலத்தில் நீர் மாசடையாமல் பாதுகாத்து தூய நீரை யாழ். மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளார்.

Related Posts