- Tuesday
- September 23rd, 2025

ஐ.நாவின் குற்றம் மற்றும் போதைப்பொருள் அலுவலகத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரிகள் பிலிப் டைவேட் குழு ஒன்று இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ளதுடன் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து சென்றுள்ளனர். (more…)

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)

விட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். (more…)

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் (more…)

பதுளை மாவட்டம், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். (more…)

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள வடமாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

யாழ் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நோபுஹிட்டோ ஹொபு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை நேற்று(30) சந்தித்தார். (more…)

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

காரைநகர் பிரதேச சபையின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளாலும் கூச்சல் காரணமாக தாங்கள் பணியினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக உத்தியோகத்தர்களும் (more…)

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தமை தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)

பதுளை - கொஸ்லந்தை - மீரியாபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தலைமையில் இடம்பெற்றது. (more…)

வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். (more…)

சங்கானையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளார். (more…)

பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெந்த தோட்டத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றார். (more…)

பளைப் பகுதியில் - ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். (more…)

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

All posts loaded
No more posts