Ad Widget

‘கொடிமா’ வகை மாமர பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தினால் ‘கொடிமா’ என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் தெரிவித்தார்.

mangoo-tree

நீளமான காம்புகளைக் கொண்ட இந்த மாங்காய் 250 கிராம் முதல் 325 கிராம் வரையான நிறையை கொண்டிருப்பதோடு முற்றிலும் நார்த்தன்மை அற்றதாகும். மஞ்சள் நிறமும் சிறந்த வாசனையும் சிறந்த சுவையும் கொண்டதாகும்.

இம்மரம் நாட்டப்பட்டு 3ஆம் வருடத்தில் காய் காய்க்கிறது. பின்னர் 200 காய்வரை காய்க்கும். ஏற்றுமதித் தரம் கொண்ட இந்த மரங்கள், சிறிய இடத்திலேயே வளைந்து வளரும் தன்மை கொண்டது. அதாவது 5 மீற்றர் தூர இடைவெளி போதும்.

அத்துடன், எந்தவித நோய்த் தாக்கமும் இம்மரத்துக்கு ஏற்படாது. இதற்கான ஆராய்ச்சிகள் பூர்த்தியாகியுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts