- Wednesday
- August 27th, 2025

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார...

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) காலை வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள்...

தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020...

நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,...

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார். அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு,...

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது. மாதமொன்றுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து ரூபாவை வருமானமாக பெறும் ஒருவர் ஒரு மாதத்திற்கு...

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும்...

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான ஓட்டுநர் உரிமங்கள் உள்ளதெனவும் அவர் குஸலானி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்....

புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளன. மாஸ்கோவிற்கும், கீவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான...

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு...

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள்...

சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். 151 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருந்தாலும், தற்போது அந்த எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியளாரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக...

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட...

வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த 152 இலங்கையர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று (27) இரவு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, படகு மூலம் நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோர்...

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும்...

All posts loaded
No more posts