Ad Widget

திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு !

தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர்.

நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15 ஆம் திகதி எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கோண்டாவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற எக்காரிகையை அடுத்து 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என எம்.கே. சிவாஜிலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Related Posts