- Thursday
- August 28th, 2025

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில்...

வட்ஸ்அப் (whatsapp) செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது. அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு...

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத்...

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சு ஒன்றின் செயலாளராக அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அவருடைய இடத்திற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமத ரூபாவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலராக வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் மேற்கு திசையில் வலுப்பெற்ற தாழமுக்கம், இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சபரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்று(செவ்வாய்கிழமை)...

28 இலட்சம் பேர் அங்கத்துவம் வகிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக மட்டுமே பரிமாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்....

நத்தார் பண்டிகை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் (27.12.2022) முதல் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என...

உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கான நாளாந்த தேவை குறைந்துள்ளதாக...

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும்...

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள்...

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம்...

தாழமுக்க மண்டலம் வலுவிழந்து இன்று (திங்கட்கிழமை) இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நாட்டின் வானிலையில் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 21 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம், சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக, குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சந்திப்பினை ஒத்திவைக்கக்கோரி...

ஊறுகாவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு (வியாழக்கிழமை) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர். குறித்த பையினை எடுத்துப் பார்த்தவேளை அதனுள் 35 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டன. அந்தப் பணப்பை ஊர்காவற்துறை...

கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளான பஸ் சாரதியை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று செவ்வாய்க்கிழமை (டிச 21) மாலை கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதுடன் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர்...

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (புதன்கிழமை) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ...

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும்...

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு...

All posts loaded
No more posts