Ad Widget

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அமுலாகும் புதிய நடைமுறை

28 இலட்சம் பேர் அங்கத்துவம் வகிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக மட்டுமே பரிமாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

15 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் தொழில் வழங்குனர்கள் குறிப்பிட்ட பங்களிப்புத் தொகையையும் மாதாந்த அறிக்கைகளையும் ஒன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

இந்த முறையின் ஊடாக தொழில் வழங்குனர்கள் மிகவும் இலகுவாக தமது ஊழியர்களின் பங்களிப்புத் தொகையை சேவை நிலையத்தில் இருந்த படியே பரிமாற்ற முடியும்.

ஊழியர்களும் தமது பங்களிப்புத் தொகை நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்காக எதிர்காலத்தில் குறுந்தகவல் சேவை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Related Posts