காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அக் கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைகள் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி செம்மணி பகுதியில் காலை 10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் அதேபோன்று ஏனைய தரப்புக்களும், உறவுகளின் நீதி கோறல் போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts