- Friday
- April 17th, 2026
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும் நேற்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில்...
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் (08.05.2023)ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளையிலே இளைஞர் கைது...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது நேற்று (09.05.2023) வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர். குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் நேற்றையதினம்(08.05.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த வளாகம் புலிகளின் தேவைக்கான பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் அதை அவர்கள் தமது முகாமாக...
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு...
யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல்...
சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு 3,638 ரூபாயாகவும் 5 கிலோ 40 ரூபாய் குறைக்கப்பட்டு 1,462 ரூபாயாகவும் 2.3 கிலோ 19 ரூபாய் குறைக்கப்பட்டு 681 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...
இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் எனும் பேக்கரி உணவுப்பொருள் 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போது 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி...
கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து...
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். 92-ஒக்டேன் பெட்ரோல் விலை 7 ஆல் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தற்போதுள்ள கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள்...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26)...
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வ கட்சிப் பேச்சு...
சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை...
Loading posts...
All posts loaded
No more posts
