முல்லைத்தீவில் பெண் ஊழியர் மீது பாலியல் பலாத்கார முயற்சி!!

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் 15.05.2023 பாதிவாகியுள்ளது. முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த பெண்ணை காட்டிற்குள்...

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்!!

டக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நேற்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் . வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால்...
Ad Widget

இரவோடு இரவாக மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்கள்!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] குறித்த சம்பவம் நேற்று (15.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட போது பிரதேச...

நடராஜர் சிலையை திருடிய இராணுவ வீரர் கைது!!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம்...

யாழில் சிறுவர்களை உள்ளடக்கிய வன்முறை கும்பல் ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் குரூப் ஊடாக ஒன்றிணைந்திருந்த வன்முறை கும்பல்களை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் முதல் 23 வயது இளைஞர்கள் வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வன்முறை கும்பல் ஒன்றாக தம்மை சமூக ஊடகங்கள் ஊடாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக...

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு : 8 பேர் கைது

காங்கசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பை திருடிய தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்து சுமார் ஒரு தொன் திருடப்பட்ட இரும்பை லொறியில் ஏற்றிச் சென்ற வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து...

இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே எமது இலக்கு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம் – சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பிலான இன்றையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள...

பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை!!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான...

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார்த்தின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன்...

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம்!!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில்...

உரும்பிராயில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

உரும்பிராய் பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார், குறித்த மரணம் தற்கொலையா? அல்லது கிணற்றினுள் தவறி விழுந்தாரா ? என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள் இன்று நடைபெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவே;ளை .நேற்றைய தினம் நடத்தப்பட கலந்துரையாடலில் நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது....

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு சட்ட நடவடிக்கை!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்ததாகப் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11.05.2023) தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிலையில், அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை...

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர், அவர்களிடம்...

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டடிருந்தனர், இதேவேளை வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி...

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த...

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்ற திட்டம் !!

நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டரை வயது குழந்தை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கருணாநிதி...
Loading posts...

All posts loaded

No more posts