- Wednesday
- August 27th, 2025

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி...

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார். அரசாங்க...

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று(புதன்கிழமை) காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியது. இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை சர்வமதத்...

யாழ்.மாநகர சபையில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட்டினை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு...

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில்...

யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கட்டம் கட்டமாக தற்போது முன்னேற்றமடைந்துக் கொண்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடனும்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர் பருவகாலசீட்டு பெற்று பயணம் செய்து வந்துள்ளார். ஆவரங்காலிற்கு அண்மித்த பகுதியில் அவர் பேருந்தில் ஏறுவது...

நெடுந்தீவுக்கு இதுவரை காலமும் இலவசமாக சென்ற கடற்பயணத்திற்கு எதிர்காலத்தில் பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். படகு திருத்தத்திற்கு தேவையான பணம் கிடைக்காமை இதற்கான காரணமாகும். சேவையில் ஈடுபடும் இரண்டு படகுகள் தற்போது சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மக்களுக்கு சரியான முறையில் சேவையை வழங்க முடியாதுள்ளது. இதற்கு...

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி...

நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச்...

யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ...

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள்,...

யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை,...

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 40,000 மெற்றிக்தொன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெற்றிக்தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும். சிறிய மற்றும்...

இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களை வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை...

கடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டன. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது....

All posts loaded
No more posts