நெடுந்தீவு ஐவர் படுகொலைக்கும் இராணுவம், கடற்படைக்கு தொடர்பு?? – சிறிதரன்

நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில்...

EPF-ETF தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்!!

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (26.04.2023) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“2015 ஆம் ஆண்டு...
Ad Widget

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

கொடிகாமம் எருவன் பகுதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் சாரதா...

நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அத்தகைய நடத்தைக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகின்றது, 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை பிள்ளைகளுக்கு...

சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு சுகாதார தரப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார். ஆகையினால், ஆபத்திலுள்ளவர்கள் சூரிய ஒளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்பதுடன், நீரிழப்பைத் தவிர்க்க போதியளவு நீர் அருந்த வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்....

அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்தும் நடைமுறையில்!!

பண்டிகை காலத்தையிட்டு அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரையில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மருத்துவருக்கு உயிர் அச்சுறுத்தல்!! சுகாதார நிலைய சேவைகள் இடைநிறுத்தம்!!

மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குழு ஒன்றினால் மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கடைசி பங்குனித் திங்கள் தினமான ஏப்ரல் 10ஆம் திகதி...

வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டிவிட்டு கொள்ளையிட முயற்சித்தவர் மக்களால் மடக்கி பிடிப்பு!!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டிவிட்டு கொள்ளையிட முயற்சித்தவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள...

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள்!!

கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன்...

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை செல்வபுரம்...

வெடுக்குநாறிக்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது!!

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த...

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக...

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,...

முன்னாள் தவிசாளர் கைது!!

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்...

5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வீட்டில்...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். . கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தலா 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரெழு பகுதியை சேர்ந்த...

அருண் சித்தார்த் கைது

  நேற்று முன்தினம்  (20) இரவு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள லக்ஸ் புதுமுக ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான யெயந்திரன் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அருண்சித்தார்த் உட்பட பலர் யாழ்.பொலிஸாரால்...

யாழ். நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவரின் கொலை விவகாரம்! ஒருவர் கைது

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர்  என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
Loading posts...

All posts loaded

No more posts