- Saturday
- August 23rd, 2025

யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு...

யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல்...

சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு 3,638 ரூபாயாகவும் 5 கிலோ 40 ரூபாய் குறைக்கப்பட்டு 1,462 ரூபாயாகவும் 2.3 கிலோ 19 ரூபாய் குறைக்கப்பட்டு 681 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் எனும் பேக்கரி உணவுப்பொருள் 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போது 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி...

கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து...

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். 92-ஒக்டேன் பெட்ரோல் விலை 7 ஆல் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தற்போதுள்ள கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள்...

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26)...

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வ கட்சிப் பேச்சு...

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை...

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (27) உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதியில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவத்தில் கத்தி வெட்டுக்கு இலக்காக படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர்...

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண...

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. ஆயர் இல்லம் சார்பில் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளனர். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கச்சதீவில் புத்தர் சிலை...

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத...

யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலமாகியுள்ளதுடன், மோசடி வியாபாரி மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் யாழ்.நகர பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதியான சோடா போத்தல்களை காலாவதி திகதியில் மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும் ஒரு விநியோகஸ்த்தர் விற்பனைக்காக வழங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது....

நல்லுார் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் இடம்பெற்றிருக்கின்றது. மரண வீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர் நீரில் தத்தளிப்பதைக் கண்டு மூத்த சகோதரர்...

All posts loaded
No more posts