- Saturday
- August 23rd, 2025

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான...

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார்த்தின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன்...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில்...

உரும்பிராய் பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார், குறித்த மரணம் தற்கொலையா? அல்லது கிணற்றினுள் தவறி விழுந்தாரா ? என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள் இன்று நடைபெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவே;ளை .நேற்றைய தினம் நடத்தப்பட கலந்துரையாடலில் நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது....

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்ததாகப் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11.05.2023) தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிலையில், அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை...

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர், அவர்களிடம்...

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டடிருந்தனர், இதேவேளை வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி...

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த...

நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கருணாநிதி...

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும் நேற்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில்...

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் (08.05.2023)ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளையிலே இளைஞர் கைது...

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது நேற்று (09.05.2023) வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர். குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் நேற்றையதினம்(08.05.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த வளாகம் புலிகளின் தேவைக்கான பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் அதை அவர்கள் தமது முகாமாக...

All posts loaded
No more posts