உரும்பிராய் பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது.
அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார், குறித்த மரணம் தற்கொலையா? அல்லது கிணற்றினுள் தவறி விழுந்தாரா ? என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.