யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து தமிழகம் சென்ற புறா காலில் சீன எழுத்துக்கள்!!

இலங்கையில் இருந்து வந்ததாக நம்பப்படும் புறா ஒன்று தமிழகம் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரை சேர்ந்தவர் அரச குமார். இவர் கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காலில் பிளாஸ்டிக் கட்டிய...

யாழ்.நல்லுாரில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்து உரிமையாளர் மீது சாணித் தண்ணீர் ஊற்றி தாக்குதல்!

யாழ்.நல்லுார் - செட்டித்தெருவில் உள்ள விடுதி ஒன்றக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சாணி தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாக்குதலுக்கு இலக்கான விடுதி உரிமையாளர் கூறுகையில், அருண் சித்தார்த் எனும் நபரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட குழுவே தன் மீது தாக்குதல் நடத்தியதாக...
Ad Widget

வட, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் – அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத தடைச்...

பல ஆயிரக்கணக்கான இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவில் விற்பனை – வெளியான அதிர்ச்சித் தகவல்

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. 60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள்...

பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார். மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய...

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா ஐ.ஓ.சி!

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை...

தாங்கள் யாரிடமும் குரங்குகளைக் கேட்கவில்லை என சீனா கைவிரிப்பு.

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம்...

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் நேற்று(19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பலி

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

படகு சேவையை தொடங்குவதற்கான இந்தியாவின் அனுமதியில் தாமதம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி...

யாழ்.மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!!

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை...

யாழில் வெடி குண்டு வீச்சு!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...

மகனால் தந்தை அடித்துக் கொலை!!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மகனால் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று (18) இரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் 66 வயதுடைய முதியவர் ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கம்! இலங்கையில் அதிக வெப்பம் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்...

அழகி, அழகன் தெரிவு, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட...

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது குறித்த வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம்...

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, ​​​​இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

யாழில் தற்கொலைக்கு முயன்ற பெண் பலி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் (16) இரவு...
Loading posts...

All posts loaded

No more posts