- Tuesday
- June 16th, 2026
வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,...
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பக்கற் யூஸ், ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. குறித்த பக்கற் யூஸை அருந்தும் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ...
தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துளளார். இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது...
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் - புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட தொடருந்து பாதையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள்...
023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கிணங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா காலத்தின்போது, உயர்த்தரப் பரீட்சைகள், சாதாரணத்தரப் பரீட்சைகள்,...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது. இதேவேளை இன்றைய தினம் கிளிநொச்சி மற்றும்...
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார். மகோற்சவ திருவிழாக்களில் கலந்துகொண்ட பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டைகள், பணப்பைகள், மணிக்கூடு, தேசிய...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது. இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத்...
தியாகி திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி, ஆறு பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரினால்; கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவு...
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். இதனையடுத்து நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் இடம்பெற்றது....
யாழில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய்...
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முயன்ற குற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் கரவிட்ட பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த சார்ஜென்ட் மேலும் இரு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து போலி...
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனமானது...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன...
தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி செயற்படுவதாக குறிப்பிட்டு இந்த பேரணியை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று...
கொழும்பின் பல பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் தடுக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்கிழமை) கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ்...
நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில்; ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தழிழ் சிங்கள மக்களிடையே...
யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகம் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
