யாழில் அதிகாலையில் நடந்த அனர்த்தம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts