- Sunday
- August 23rd, 2026
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தமான் கடல் பிராந்தியத்தின் தென் பகுதியுடனும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துடனும் இணைந்த கடல் பிராந்தியங்களுக்கு மேலாக...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (29) இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வீட்டில் இருந்து 5 பவுன் பெறுமதியான நகை காணாமற் போயுள்ளதால் திருட்டில்...
இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே...
மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து...
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின்...
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறும் போது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் முல்லைதீவு கொக்குத்தொடுவாய்...
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து...
காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசமானது கடந்த...
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் நேற்றைய தினம்(28) இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை...
இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும் 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்....
சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கஜந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவகத்தில் பணியில் இருந்த வேளை மின்சாரம் தாக்கியதாகவும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பாகவே நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை புலிகளின் தலைவரின்...
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர்...
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம்...
மாவீரர் நாளான இன்று(27) அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர்...
சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமை போன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளனர். புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் இதனைத் தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக்...
Loading posts...
All posts loaded
No more posts
